தமிழக அரசின் கல்வித்தரம் குறைவா? என்கூட வாங்க ஆளுநரே - அழைப்பு விடுத்த அன்பில் மகேஷ்! - Seithipunal
Seithipunal


கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும் என்று, மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என, விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார்,

நேற்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இயங்கிவரும் கே.டி.சி.டி பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்க்கு தனது பதில் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், தமிழநாடு அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் உள்ளது. போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

குறிப்பாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்களிலிருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயிற்சி எடுக்கின்றனர். ஏன், மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கூட தமிழக அரசின் பாடப்புத்தகங்களை தான் படிக்கின்றனர்.

நான் நூலகத்தில் ஆய்வு செய்ய சென்றபோது, மாநில பாடத்திட்டத்தை அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே பாராட்டி உள்ளனர்.

வேண்டுமானால் ஆளுநர் என்னோடு எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் வரலாம். அங்கு வரும் அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை அவர் நேரலை சந்தித்தால் இந்த உண்மை புரியும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட, தமிழக அரசின் பாடத்திட்டம் மேலானது, இதனை கமிட்டி அமைத்து விசாரித்தால் ஆளுநரும் புரிந்துகொள்வார்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor RN Ravi vs Minister Anbil Mahesh State Education issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->