ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு தான்! ஆனால், அமைச்சர்கள் பங்கேற்பார்கள் - பரபரப்பு பேட்டி!
TN Governor Tea Party DMK TN Minister 2024
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு, அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், தமிழக அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் அழைத்துள்ள இந்த தேநீர் விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பார்கள். ஆளுநர் பொறுப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த தேநீர் விருந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்தியல் ரீதியாக மாறுபாடு இருக்கிறது. எனவே, கட்சி ரீதியாக இந்த விருந்தில் திமுக பங்கேற்கவில்லை" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
முன்னதாக ஆளுநர் மாளிகையின் இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது திமுகவும் புறக்கணிப்பதாகஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN Governor Tea Party DMK TN Minister 2024