பரந்தூர் விமான நிலையம் - வெளியானது நில எடுப்புக்கான அறிவிப்பு.!   - Seithipunal
Seithipunal


சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க, நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது காஞ்சிபுரம், சிறுவள்ளூரில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளிஇடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce take land foe paranthur airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->