பேருந்துகளில் இனி நடத்துநர் தேவையில்லை.. தமிழக போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு.!
TN govt introduce to self ticket in govt busses
அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கும் காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது. .
இந்த நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தானியங்கி பயணச் சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
TN govt introduce to self ticket in govt busses