அரசு மருத்துவமனைகளில் மூன்று ஷிப்ட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
tn govt order three shift in govt hospitals
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் இதுவரை இரண்டு ஷிப்ட் என்ற முறைகளிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் 50% பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீதம் பேர் 2-வது ஷிப்டிலும், 25 சதவீத பேர் மூன்றாவது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
tn govt order three shift in govt hospitals