கொரோனா பரவல் அதிகரித்தால் தமிழகம் தாங்குமா..!! தமிழக அரசு எடுத்த விபரீத முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்த சமயத்தில் மருத்துவ துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால் கடும் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போதைய அதிமுக அரசு ஒப்பந்த அடிப்படையில் தமிழக முழுவதும் 2,300 செவிலியர்களை பணியில் அமர்த்தியது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்றது.

அதன் பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் கூட குறைந்த குறைய தொடங்கியது. இதன் காரணமாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் இதர மருத்துவ பணிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் அவர்களின் ஒப்பந்த காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இருப்பினும் செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் நல சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்பொழுது பி.எஃப்7 வகை கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியை நீட்டிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவால அதிகரிக்க தொடங்கிய சமயத்தில் தமிழக அரசு விபரீத முடிவு எடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt ordered no service extension for contract nurses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->