குட் நியூஸ்.. 500 பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்... தமிழக அரசு ஒப்புதல்..!!
TN govt provides subsidy for 500 women to buy autos
தமிழகத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானிய வழங்க என தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படிப்பதற்கு வழங்கப்பட்ட ரூ.1,000 மானியத்தை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் பொழுது அறிவிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வழங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
English Summary
TN govt provides subsidy for 500 women to buy autos