மருத்துவத்துறையில் மலை போல் தமிழக அரசு சாதனை புரிந்து உள்ளதாக தமிழக அரசு பெருமிதம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மருத்துவத்துறையில் மலை போல் தமிழக அரசு சாதனை புரிந்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் மருத்துவத் துறையில் மலை போல் சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ துறையை, ஆஸ்திரேலிய நாடும். மேகாலயா. குஜராத் மாநிலங்களும் பாராட்டியுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மக்களை தேடி மருத்துவத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த மக்களை தேடி மருத்துவ திட்டத்தால் 632 கோடி மதிப்பெட்டில். சுமார் ஒரு கோடி 85 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுநீரக பாதுகாப்பு திட்டத்தால் இதுவரை 56 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தால் ஒரு கொடியே 47 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாகவும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தரும் ஊக்கத்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவ துறை 545 விருதுகளை பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Say About TN Govt Records in Medical Dept


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->