அதிமுகவின் முக்கிய புள்ளியின் வீட்டில் அதிரடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


அதிமுக வேளச்சேரியின் பகுதி செயலாளராக இருக்கும் எம்.ஏ மூர்த்திக்கு சொந்தமான இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேளச்சேரி, ஆண்டாள் நகர் பகுதியில் வசித்து வரும் எம்ஏ மூர்த்தி மற்றும் அவரின் மனைவி சுதா ஆகியோர் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக புகார் எழுந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தாசில்தார், நில அளவையாளர், சர்வேயர் ஆகியோரின் துணையுடன் இந்த நில அபகரிப்பு நடந்ததாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.ஏ மூர்த்தி மற்றும் அவரின் மனைவியை உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தாசில்தார் மணி சேகர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வேளச்சேரியில் உள்ள எம்.ஏ மூர்த்தியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சென்னையில் மேற்கு மாம்பலம், கோவை உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC Raid in ADMK MA Moorthy home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->