ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர்கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன.

மேலும் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாளவன் கூட, உண்மையான குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் விமர்சித்து இருந்தார். 

இது அனைத்திற்கும் மேலாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், சென்னையின் காவல் ஆணையர் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் முதல் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வரை கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த படுகொலை சம்பவத்தை பொருத்தவரை கொலையாளிகள் யாரும் நேரடியாக போலீசாரால் கைது செய்யப்படவில்லை. மாறாக அவர்கள் சரணடைந்திருப்பதும், இந்த கொலை திட்டமிட்ட ஒரு படுகொலை என்பது அம்பலமானது. 

மேலும் கொலையாளிகள் நாங்கள் பழிக்கு பழியாகத்தான் இந்த கொலையை செய்தோம் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை காவல் ஆணையரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt shifted Chennai CoP Sandeep Rai Rathore after Amstrong murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->