தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி- தமிழக அரசு அரசாணை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வுக் கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பிஎஃப்) வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுகிறது. இதில், 

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, 
விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, 
விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.5.8 கோடி,
சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.6 கோடி
கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.4.3 கோடி
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.8 கோடி
மதுரை போக்குவரத்துக் கழகத்துக்குரூ.3.2 கோடி
திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு  ரூ.2.9 கோடி வழங்க வேண்டும். 

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. 

இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி தமிழக அரசு ஆணி பிறப்பித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Transport Retired Staff TNGO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->