ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசார் எடுத்த முக்கிய முடிவு - கொலைக்கான பின்னணி யார் என்பது விரைவில் தெரிய வரும்..!!
TN Police Taken Important Decision in Armstrong Murder Case
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிகள் முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்(52) கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் கொலையில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்த 11 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, 11 பேரையும் போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்தைக் காட்டுவதற்காக போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, தப்பியோட முயன்றதால் போலீசார் அவரை என்கவுன்ட்டர் செய்து கொன்றனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகிய மூவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடம் நடத்தும் விசாரணையில் இந்த கொலையின் பின்னணி யார் என்பது தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே என்கவுன்ட்டர் செய்யப்பட திருவேங்கடம் தவிர்த்து மற்ற 10 பேரும் தற்போது பூந்தமல்லி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN Police Taken Important Decision in Armstrong Murder Case