ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. பேருந்து பயணிகளுக்கு போக்குவரத்துத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!
TN public transport department announced bus ticket booking for full lockdown
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் பேருந்துகளின் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.
பொங்கல் பண்டிகையின்போது பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிப்பால் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் 2 நாட்களில் திருப்பி தரப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 16ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனவும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள், திங்கள்கிழமை பணிக்கு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
English Summary
TN public transport department announced bus ticket booking for full lockdown