கடலூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
TN Rains Chennai Rains alert 2023 Aug 12
தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை முதல் வருகின்ற 18-ம் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னல்கள் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலேயே நிலவியுள்ளது.
அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 12 சென்டிமீட்டர் அளவும், குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் ஒரு சென்டிமீட்டர் அளவு மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
English Summary
TN Rains Chennai Rains alert 2023 Aug 12