நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது! தமிழகத்தின் நிலை என்ன? - பாலச்சந்திரன் பேட்டி!
TN Rains Weather Update balachandar 1212
அரபிக்கடல் : அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் பெட்டியில், "அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. நாளை அந்தமானை நோக்கி நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
அடுத்து வரும் 5 தினங்களுக்கு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகாது. வரும் தினங்களில் மழை படிப்படியாக குறையும்.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்" என்று தெரிவித்தார்.
English Summary
TN Rains Weather Update balachandar 1212