தமிழகத்தில் கோடை வெப்பத்தால் மின்தடையா? அதிரடி நடவடிக்கை இறங்கிய மின்வாரியத் துறை!
TN Summer power cut TNEB
தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் மின்தடையை தவிர்க்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மின்மாற்றிகளில் பழுது ஏற்படுதல், அல்லது அவற்றில் தீ பற்றும் சம்பவங்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சார தேவையை நிறைவேற்ற மாவட்ட வாரியாக புதிய மின்மாற்றிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என மின்வாரிய தலைவர் அனைத்து மாவட்ட மின்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் மின்தடை குறித்து புகார் அளித்தால், உடனடியாக சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார சீரமைப்புப் பணிகளைச் செய்ய தேவையான பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 22,000 மெகாவாட் வரை மின்சார நுகர்வு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.