அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு - போக்குவரத்து கழகம்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது .

தமிழகத்தில்உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வுகோரி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது.

14 வது ஊதிய பேச்சுவார்த்தை, அகவிலைப்படி உயர்வு காரணமாக, மாதத்திற்கு ரூ.10 கோடி செலவு அதிகரித்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் மாதம் ரூ.3.40 கோடி வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்குமாறு அனைத்து மண்டல மேலாளர்களும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN transport corporation big announcement of driver and conductor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->