தமிழகத்தின் இரு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 4 மாவட்டங்களில் வெப்பநிலை மாற்றம்!
TN Weather Report And Rain Alert 09072023
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய (மஞ்சள் எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்து வரும் ஆறு நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை :
வருகின்ற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10, 11 மற்றும் 14, 15 ஆம் தேதி ஆகிய நான்கு தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆறு சென்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது, குறைந்தபட்சமாக விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
வெப்பநிலை மாற்றம் : கடலூர், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை :
English Summary
TN Weather Report And Rain Alert 09072023