#சற்றுமுன் | 13 மாவட்டங்களுக்கு திடீர் அலர்ட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


இன்று (25.12.2023) மதியம் ஒரு மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பழனி 3 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 

அதன்படி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி - காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

மேலும் ஒரு அண்மைய செய்தி : சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைக்குப் பின் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் செல்லக்கூடிய சாலைகள் 40 சதவீதம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் மழைக்குப் பின் நோய்த்தொற்று எதுவும் பரவவில்லை என்றும், மருத்துவ முகாம் தொடரும் என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Weather Update Chennai IMD 25 12 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->