வடிவேலு பாணியில் கார் வாங்குவதை போல நடித்து, ஆட்டையை போட்ட இளைஞர்.!
Tn youngster Theft Pondicherry car
வாகனங்களை வாங்க ஷோரூம் சென்றால், அங்கிருக்கும் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து வாங்குவது வழக்கம். வடிவேலு பாணியில் கார் வாங்குவது போல நடித்து காரை ஓட்டிச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன் என்ற நபர் தனது காரை விற்பனை செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளிவிட்டு விளம்பரம் செய்தார். இதை பார்த்த ஒரு இளைஞர் அந்த காரை தான் வாங்க விரும்புவதாக இணையத்தில் தொடர்பு கொண்டு முகவரி கேட்டு குமாரனை வந்து சேர்ந்தார்.
பின்னர் அந்த இளைஞர் தான் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று கூறி காரை எடுத்துக் கொண்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரன் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் மரக்காணத்தில் அந்த இளைஞரை காருடன் மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவர்கள் புதுச்சேரி போலீசாரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் திருடிச் சென்ற நபர் கேரளாவைச் சேர்ந்த முகமது அஸ்லாம் என்பதும் இவர் மீது ஏற்கனவே நிறைய வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
English Summary
Tn youngster Theft Pondicherry car