பெரும் முறைகேடு.."மின்சாரத் துறையில் நூதன மோசடி".. அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு அலுவலகம் வந்து செல்ல கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் பணிபுரியும் இயக்குனர்கள் மற்றும் சில தலைமை பொறியாளர்களுக்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

மற்ற அதிகாரிகளுக்கு அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று தமிழக முழுவதும் 12 மண்டலங்கள், 44 பகிர்மான வட்டங்கள், துணை மின் நிலையங்கள், மின் நிலையங்களில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தலைமை செயற்பொறியாளர், மேற்பார்வை செயற்பொறியாளர்களுக்கு வாடகை கார்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாடகை கார்களுக்கு அரசு சார்பில் மாதம் தோறும் ரூ.35,000 வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தாமல் சொந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவோர் அரசுக்கு வாடகை கார் பயன்படுத்துவதாக போலி கணக்கு காட்டி அரசு பணத்தை முறைகேடாக பெற்று வருகின்றனர். இதன் மூலம் அரசு பணத்தை உயர் அதிகாரிகளே முறைகேடாக பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் உள்ள மின்வாரியம் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நிலையில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாடகை கார் தொடர்பான முறைகேடு குறித்துமின்வாரிய தணிக்கை குழு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சொந்த வாகனம் உபயோகித்தால் வழங்கப்படும் எரிபொருள் மானியம் போல மின்வாரிய வாரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB officials are using own vehicles to engage in malpractices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->