மின்சாரக் குறைபாடுகளை சரிசெய்ய சிறப்பு முகாம் – தமிழக மின்வாரியம் அறிவிப்பு!
TNEB Special Camp
தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வரும் ஏப்ரல் 5, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு புகார் முகாம் நடைபெறும்.
மின் நுகர்வோர்களின் முக்கிய குறைகளுக்குத் தீர்வு காணும் இந்த முகாமில்:
மின் கட்டணத் தொகை தொடர்பான விவகாரங்கள்
மின் மீட்டர் கோளாறுகள்
குறைந்த மின்னழுத்தம் பற்றிய புகார்கள்
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றம் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் உடனடியாக தீர்வு காணப்படும்.
புகார் அளித்த நுகர்வோர்கள், தங்களின் கோரிக்கைகள் குறித்து உறுதிச் செய்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்படும்.
மின்சார நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தமிழக மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.