நாளை தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக்! கடைசி நேரத்தில் தொடரப்பட்ட பரபரப்பு வழக்கு!
TNG Transport Staff strike issue Chennai HC Division case
பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி,ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகாளை வலியுறுத்தி, 9-ந்தேதி (நாளை) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு தரப்பில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளைய தினம் விசாரணை செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
TNG Transport Staff strike issue Chennai HC Division case