மூன்று மாவட்டங்களில் சவுடு மண் அள்ள அனுமதி..!! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!
TNgovt allowed to take soil in three districts
வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் மண்பாண்டங்கள் செய்ய நீர் நிலைகளில் இருந்து வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் வண்டல் மற்றும் சவுடு மண் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் "உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் குவாரிகள் அமைக்காமல் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மற்றும் சவுடு மண்ணை அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், வடிகால்வாயில் உள்ள வண்டல் மற்றும் சவுடு மண் அள்ள மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் அனுமதி வழங்கலாம்.
மேலும் அவ்வாறு அனுமதிக்கப்படும் இடங்களில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம் மற்றும் பழங்கால கோயில்கள் அமைந்திருந்தால் அவ்விடத்திலிருந்து 500 மீட்டர் இடைவெளி பின்பற்றி அனுமதி வேண்டும். மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் இந்த அனுமதியானது நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையக்கூடாது" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் மண்பாண்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வண்டல் மற்றும் சவுடு மண்ணை நீர் நிலைகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
TNgovt allowed to take soil in three districts