தமிழக விவசாயிகள் கவனத்திற்கு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNGovt Announce For farmers
தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர்காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டிப்பு. இத்திட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்ய வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அரசு அறவிப்பில், சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை (15.11.2024) நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 30.11.2024 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, சனி (23.11.2024) மற்றும் ஞாயிற்று கிழமையில் (24.11.2024) பொது சேவை மையங்கள்செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
English Summary
TNGovt Announce For farmers