மீண்டும் மீண்டுமா.. அரசு பேருந்து கொள்முதல் டெண்டர் அவகாசம் 10வது முறை நீட்டிப்பு..!! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர ஜூன் 13-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள் முதல் செய்வதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி பிஎஸ் 6 வகை குளிர்சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள் முதல் செய்யப்பட உள்ளன.

பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதிபெற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு கடைசியாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தின் படி மே 23ஆம் தேதிக்குள் டெண்டர் கோரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 10வது முறையாக டெண்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 13-ம் தேதிக்குள் புதிய அரசு பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரலாம் என அறிவிக்கப்படவுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அரசின் வழிகாட்டுதல்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முழுவதும் அரசு பேருந்துகளின் நிலை மோசமாக உள்ளதாலும், மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தின் படி பழைய பேருந்துகள் உபயோகத்திலிருந்து நீக்கப்பட உள்ளதாலும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு போக்குவரத்து துறையில் பேருந்து தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்த 1,771 புதிய பேருந்துகள் கொள்வதற்கான டெண்டரை கோர யாரும் முன்வராமல் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுவது பல சந்தேகங்களை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முனைப்பில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt bus procurement tender 10th time extended


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->