பொங்கலுக்கு ஊருக்கு செல்ல முடியுமா? போராட்டத்தை அறிவித்த போக்குவரத்துத் தொழிலாளர்கள்!
TNGovt Bus Staffs Strike announce 2024
15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் 9-ஆம் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்த AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன.
பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் என்றும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியமன கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை இன்னும் ஒரு சில தினங்களில் தமிழக அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TNGovt Bus Staffs Strike announce 2024