₹1000 திட்டத்தில் இவர்களுக்கு நிதி ஒதுக்கீடு.!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தற்பொழுது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளக்கத்தில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2023 2024 வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஏழாயிரம் கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவருக்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல் திட்டத்தின் பயன் அவர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட 1,540 கோடி ரூபாயை பட்டியல் இனத்தவருக்கு மட்டும்தான் செலவிட இயலும். 

கடந்த 2020-2021 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்கள் பயனளிக்கக்கூடிய ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2023-2024 ஆம் ஆண்டு வரவு செலவு சட்டத்தில் 17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.சமூக நீதிமன்றம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த அரசு பட்டியல் இனத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

மேலும் இவ்வாண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் துணை திட்டங்களின் விதியை சிறப்பாக செயல்படுத்திட ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இதற்கான பல்வேறு தரப்பினரின் கலந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பட்டியலில் பெண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும். ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவினத்தை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையின் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 

எனவே ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியல் இனத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய தொடர்ந்து செயல்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt clarified allocated funds separately for the SC under 1000rs scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->