ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நிரந்தரம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றின் பொழுது தமிழக முழுவதும் 2300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமத்தப்பட்டனர். அவர்களின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் அனைத்து ஒப்பந்த செவிலியர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது "ஒப்பந்த செவிலியர்களின் தற்போதைய நிலைக்கு முழு காரணமாக இருந்தவர்களே முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் செயல்படுகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு 2345 செவிலியர்கள் பணியில் சேர்ப்பதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2323 பேர் பணியில் சேர்ந்துள்ளனர.

கடந்த அதிமுக ஆட்சியின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் எந்த ஆவணங்களையும் கேட்காமல் புதிய செவிலியர்களை பணி அமர்த்தினார். தற்பொழுது இருக்கும் காலி பணியிடங்களில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு மிக குறைவு. எனினும் ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது.

பிற அரசியல் கட்சிகளுக்கு சுகாதாரத் துறையின் மீது இருக்கும் அக்கரை போல எங்களுக்கும் உள்ளது. யாரையும் பாதிப்படைய விடமாட்டோம். இந்த தவறுக்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் உள்ளவர்களே பரிகாரம் தேடிக் கொள்ளலாம். எதுவும் தெரியாதது போல எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுவது கேலியாக இருக்கிறது" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt Contract nurses job permanent after certificate verification


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->