தனியார் கைக்கு மாறுகிறதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
TNgovt decided to hand over Kilampakkam bus stand to private company
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தென் மாவட்டங்களுக்காக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு தனியார் நிறுவனத்தை பராமரிப்பு பணி மற்றும் நிர்வாகப் பணிகளில் நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆணடு இறுதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் சென்னையில் பெய்த ஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பேருந்து நிலைய கட்டுமான பணி தவிர ரூ.17 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போடப்பட்ட சாலையை தோண்டி எடுத்துவிட்டு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் புதிய சாலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்க ஒப்பந்தப்பள்ளி கோரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவனத்திற்கு 10 + 5 ஆண்டுகள் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
இதற்காக தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளை தனியார் வசம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒப்படைக்கப்படும். சில தனியார் நிறுவனங்கள் இந்த பேருந்து நிலைய ஒப்பந்த புள்ளியை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கு காரணம் பேருந்து நிலையத்தில் உள்ள 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தனியார் நிறுவனமே வசூலித்துக் கொள்ளலாம்.
அந்த வருவாயை வைத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இயக்க மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். தனியார் நிறுவனத்திடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒப்படைத்தால் வாகன நிறுத்தம் மற்றும் நுழைவு கட்டணம், 105 கடைகளுக்கான வாடகை, ஹோட்டல்களில் உணவுக்கான விலை ஆகியவற்றை தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும். இதனால் பேருந்து பயணிகளும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும், கால் டாக்ஸி, ஆட்டோ உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசின் இந்த விபரீத முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
TNgovt decided to hand over Kilampakkam bus stand to private company