விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. இனி குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு..!! தமிழக அரசு முடிவு..!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி அவர்களை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஃபஷல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பருவ பயிர் காப்பீட்டுக்கு மத்திய அரசு விவசாயிகள் தங்களது பயிரின் மதிப்பை பாதுகாக்க வேண்டி இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் உழைப்பிற்கும் பயிருக்கும் முழுப் பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்பொழுது வரை சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டம் கொண்டுவர தமிழக அரசு குழு அமைத்து ஆலோசனை பெற உள்ளது. இந்தக் குழு வழங்கும் ஆலோசையும்படி வரும் பருவத்தில் குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt has decided to provide crop insurance for Kuruvai cultivation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->