#BREAKING || கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்த நிலையில் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோரமண்டல் உர தொழிற்சாலையில் இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. அமோனியா ரசாயனம் காற்றில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt order to temporarily close Coromandel plant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->