#Breaking || மருத்துவர்கள் கட்டாயம் பணியாற்றும் விதியை தளர்த்தி அரசனை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


சேவை இல்லா முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது.

அதன் படி 2 ஆண்டுகள் கட்டாய பணி என்பதை என்பதை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சேவை இல்லா முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் படிப்பு முடிந்து அரசு மருத்துவமனைகளை பணிபுரிய விருப்பமில்லாதோர் ரூபாய் 40 லட்சத்திற்கு பதில் 20 லட்சம் கட்டினால் போதும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவையுடன் கூடிய முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் பட்டய படிப்பு மாணவர்கள் 20 லட்சத்திற்கு பதில் 10 லட்சம் செலுத்தினால் போதும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt relaxed compulsory work in govt hospitals rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->