#BigBreaking | தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி! தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
TNGovt RSS rally SC Order
ஆர்எஸ்எஸ் பேரணியை அணிவகுப்பு போன்று நடத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், "சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர முழுமையாக தடை விதிக்க முடியாது" என்று உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
மேலும், மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி அதன் அடிப்படை உரிமை" என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில் "கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொது நலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசால் விதிக்க முடியும்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல் முறையீடு மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கிடைத்துள்ளது.
English Summary
TNGovt RSS rally SC Order