ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்த தமிழக அரசு.. தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு.!!
TNGovt withheld protesting govt teachers salary
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலைஆசிரியர்கள் 19 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் உரிய முன் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை சம்பளம் இல்லா விடுப்பாக அனுமதித்து பதிவேட்டில் பதிவிட வேண்டும் எனவும், 19 நாட்களுக்கு உரிய ஊதியம் பிற பணிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் தறை உத்தரவிட்டுள்ளது.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TNGovt withheld protesting govt teachers salary