ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு.! குற்றவாளிகளை பிடிக்க துபாயுடன் ஒப்பந்தம்.!! - Seithipunal
Seithipunal


ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 5 துணை நிறுவனங்களின் இயக்குனர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

தற்போது வரை இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும் சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆருத்ரா மோசடி பணத்தில் துபாயில் சுமார் ரூ.300 கோடி வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று இந்த வழக்கில் தொடர்புடைய திரைப்பட விழா விநியோகிஸ்தானம் பாஜக நிர்வாகியமான ஆர்.கே சுரேஷ் விநாயகர் பதிவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice agreement with Dubai to nabbthe aruthra case culprits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->