தமிழ்நாட்டில் "இந்தி பேசியதால் 12 பேர் கொலை".. வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு..!!
TNpolice case filed against BJP executive spread rumours
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதால் வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர்" என்ற உண்மைக்கு புறமான செய்தியை பதிவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அவர் மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவினிங் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் தனது டிவிட்டர் பதிவினை நீக்கியுள்ளார். இதுபோன்று பல பாஜக நிர்வாகிகள் தங்களது சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பதிவிட்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
TNpolice case filed against BJP executive spread rumours