திடீர் திருப்பம்... சென்னை நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் ஆந்திரா விரைந்தது தனிப்படை..!!
TNpolice going to AP for chennai jewelery shop robbery case
சென்னை பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வந்த நகை கடையின் ஷட்டர் வெல்டிங் மிஷின்னால் வெட்டப்பட்டு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சென்னை மாநகர போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் இனோவா காரில் வந்த கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றது கண்டறியப்பட்டது.
போலீசார் ரோந்து பணியில் வராத நேரத்தை கணித்து கொள்ளையர்கள் இந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாநகர் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இனோவா கார் போலி பதிவு எண் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளையர்கள் பயணம் செய்த கார் திருமழிசை, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திராவுக்கு தப்பி சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ச்சியாக தமிழக காவல்துறையின் தனிப்படையினர் தற்பொழுது ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
English Summary
TNpolice going to AP for chennai jewelery shop robbery case