குடிமகன்களை இனி சும்மா பிடிக்க முடியாது! 10 வழிமுறைகளை வெளியிட்ட காவல்துறை! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து காவல்துறையினர் மது போதையில் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி,

1) வாகனத் தணிக்கையின் போது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்த பிறகு வாகன தனிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2) வாகனத்தானே செய்யும் போது வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் ஈறி செல்லும்போது அவர்களை பின்பு தொடர்ந்து விரட்டி செல்ல வேண்டாம். அடுத்த இடத்தில் வாகன சோதனை செய்யும் அலுவலரிடம் தகவல் தெரிவித்து வாகனத்தில் நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

3) வாகன ஓட்டு இடம் மூச்சு பகுப்பாய்வு கருவியால் மூச்சை ஊத வேண்டும் என முதலில் அறிவுறுத்த வேண்டும்.

4) குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வரும் நபர் மூச்சு பகுப்பாய்வு கருவியால் ஆய்வு செய்தபோது 30 மில்லி கிராம்/ 100க்கும் மேற்பட்ட அளவுக்கு மேல் பதிவானால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

5) மேற்படி நபர் ஓட்டி வந்த வாகனத்தை விசாரணை அதிகாரிகயால் வாகனத்தை கைப்பற்ற வேண்டும். வாகனத்தை ஓட்டி வந்த நபர்களுக்கும் வாகனத்திற்கும் எந்த விதத்தில் உரிமையானவர் என்பதை கண்டறிய வேண்டும். வழக்கு அதற்குரிய நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண வேண்டும்.

6) வாகன தணிக்கையின் போது பதிவு எண்ணையும் வாகனத்தின் சேஸில் எண்ணையும், இஞ்சின் எண்ணையும் சரிபார்த்து மேற்படி வாகனத்தின் பதிவு எண் சரியானதா? அல்லது போலியான? தான் என கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு போலியானது என்றால் மேற்படி வாகனத்தை பறிமுதல் செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வாகன ஓட்டியிடம் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

7) இ-சலான் கருவியில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம் வாகனத்தின் விவரம் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

8) வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம் வாகனத்தின் உரிமையாளரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் வழக்கு மற்றும் அபராத தொகையின் விவரங்கள் அனுப்பப்பட வேண்டும்.

9) அபராத தொகையுடன் கூடிய குறுஞ்செய்தியை ஓட்டுனரின் கைபேசி எண் இருக்கு அனுப்பப்படும் போது அதில் உள்ள மின்னஞ்சல் இணைப்பை பயன்படுத்தி அபராத தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும்/ ஆப் லைனில் செலுத்த வேண்டும்.

10) அவரது தொகை முழுவதும் செலுத்தப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதை காண்பித்த பின் வாகனத்தை உரியவரிடம் ஒப்புதல் பெற்று ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice has released 10 tips to catch drunk drivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->