#BREAKING: சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கு... சித்தூரில் சிக்கிய இருவர்.. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை...!!
Tnpolice investigate two persons in chennai jewelery shop robbery
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவரிடம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் அமைந்திருந்த ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல் கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் 9 கிலோ தங்க நகைகளும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரறங்கைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக 6 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடைக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த விசாரணையின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வைத்து இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரிடம் பிடிபட்ட உமா மகேஸ்வரன் மற்றும் மஞ்சுநாத் ஆகியோரை தனி படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் இந்த நகை கடை கொள்ளை சம்பவத்தில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களா..? அல்லது இந்த கொள்ளை சம்பவத்திற்கு உதவியவர்களா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணை முடிவில் சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்பொழுது சித்தூரில் இருவர் பிடிபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Tnpolice investigate two persons in chennai jewelery shop robbery