118 கிலோ கூல் லிப், 962 கிலோ குட்கா பொருளுடன் 971 பேர் கைது! அதிரடி காட்டும் காவல்துறை! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் காவலரையே தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பள்ளிகல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு உடனடியாக ஆசிரியர்கள் புகார் அளிக்க வேண்டும். 

பள்ளி மாணவர்களை சோதனை செய்ய வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று வரை நடைபெற்ற சிறப்பு சோதனை அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாராந்திர சிறப்பு சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 971 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. இவர்களிடமிருந்து 962 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 118 கிலோ கூல் லிப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice seized 118kg coollip 962kg gutka 971 people arrested in one week


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->