கோவை டிஐஜி தற்கொலையில் அடுத்த பரபரப்பு! வசமாக சிக்கிய 8 பேர்!!
Tnpolice Summons to 8 people commented on DIG Vijayakumar suicide
கோவை டிஐஜி தற்கொலை விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்பிய யூட்யூபர் உட்பட 8 பேருக்கு போலீசார் சம்மன்.!!
கோவை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த வாரம் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முகாம் அலுவலகத்தில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு கோவை மாவட்டம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் டிஐஜியின் பாதுகாவலர், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் உயிரிழந்தது குறித்து தவறாகவும் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்கள் பதிவிட்ட எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களிடம் எதன் அடிப்படையில் வாழ்த்துக்கள் பதியப்பட்டது. ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா.? ஆதாரம் உள்ளதா.? யார் கூறியது.? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள ராமநாதபுரம் போலீசார் யூட்யூபர் உட்பட 8 பேருக்கு சமன் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Tnpolice Summons to 8 people commented on DIG Vijayakumar suicide