குரூப் 4 தேர்வு முடிவுகள் - அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group4 Result
குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிரெண்டான நிலையில், தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது என்று, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுகளை உடனடியாக வெளியிட வேண்டுமென ட்விட்டர் வாயிலாக நேற்று #wewantgroup4results ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது.
டிசம்பரில் வெளியாகும், பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தெரிவித்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று, #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் மூலம் தேர்வர்கள் ட்ரண்ட் செய்தனர்.
சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாத, இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.