ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான செயல்முறைத் தேர்வு - வெளியானது அதிகார்பூர்வத் தகவல்.! - Seithipunal
Seithipunal


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பதவிக்கான 685 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்றது. இந்த பணிக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்ற 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வை நடத்தியது. 

பத்து மாவட்டங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 9,352 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் செயல்முறை தேர்வு வரும் 26ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், அதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால் தேர்வுக்கான பணிகள் தாமதமாகின்றன. 

தினமும் குறைவான அளவிலேயே செயல்முறை தேர்வுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருச்சியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனங்கள் என்று 3 இடங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மார்ச் மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnstc driver conductor job practical exam in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->