திருப்பதி பிரம்மோற்சவம் & மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!
TNSTC Special Bus for Tripathi and Rameswaram
திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் முன்னிட்டு, டிஎன்எஸ்டிசி சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 30 ஆம் தேதி முதல், அக்டோபர் 13 வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டிஎன்எஸ்டிசி பேருந்து சேவை இயக்கப்பட இருக்கிறது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ராமேஸ்வரத்துக்கு சிறந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அக்டோபர் இரண்டாம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு பேருந்துகளை www.tnstc.in என்ற வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
English Summary
TNSTC Special Bus for Tripathi and Rameswaram