துணைவேந்தர் நியமனம் - ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை.!
today hearing governor rn ravi case in supreme court
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கடந்த மாதம் 17-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 'துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் முட்டுக்கட்டை அடுத்த விசாரணைக்குள் தீர்ந்துவிட்டால் நல்லது.
இல்லையென்றால் தீர்த்து வைக்கப்படும்' என்றுத் தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
English Summary
today hearing governor rn ravi case in supreme court