செந்தில் பாலாஜிக்கு ஜாமீனா? இன்று வெளியாகப்போகும் முக்கிய முடிவு.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு  ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing senthil balaji apeal bail case in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->