சிறையில் வாடும் செந்தில் பாலாஜி.. வீட்டிற்கு வருவாரா? இன்று நடக்கபோவது என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 7 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதுவரைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பதினான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் புழல் சிறையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி சார்பில் சென்னை முதன்மை நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தனக்கு எதிராக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்களை, தனக்கு வழங்க வேண்டும். இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை திருத்தங்களைச் செய்துள்ளது. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அமலாக்கத் துறை ஆவணங்களைத் தயாரித்து உள்ளது. தனக்கு ஆவணங்களை வழங்காமல் முழுமையாக விசாரணையைத் தொடர்வது முறையற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் புதிய மனுவை ஏற்றுக்கொண்ட  நீதிபதி அல்லி இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் ஜனவரி 22ம் தேதி பதிவு செய்யப்படும் என்று நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளதால் அவர் பொங்கல் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து விடுவாரா? என்று அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing senthil balaji bail case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->