அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கத்தை விட இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை கட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிலையில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக (செப்டம்பர் 16ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த செயல்பாடுகள் வருகின்ற 21ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் www.tngasapg.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the last day to apply for pg courses in Govt Arts and Science Colleges


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->