இன்று ஆரம்பமாகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு.!
today plus 2 exam start in tamilnadu and puthuchery
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். மார்ச் 25ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தத் தேர்வுக்காக 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் 9 மணி அளவில் தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும்.

தேர்வறைகளில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகள் தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இன்று தேர்வு தொடங்குவதை அடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் வழங்கியுள்ளன.
English Summary
today plus 2 exam start in tamilnadu and puthuchery